தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஆலைகள் மூடப்பட்டதற்கு காரணம் யார்? - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி! - DMDK Premalatha Vijayakanth - DMDK PREMALATHA VIJAYAKANTH

Coimbatore Lok Sabha Election DMDK Premalatha Vijayakanth Campaign: கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு, கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

dmdk-general-secretary-premalatha-vijayakanth-campaigned-in-support-of-aiadmk-candidate-singai-ramachandran
கோவையில் என்.டி.சி.. மில்கள் மூடப்பட்டு வேலை வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 4:47 PM IST

கோயம்புத்தூர்: கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "எடப்பாடியும், நானும் இந்த கூட்டணி சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த கூட்டணி, ஒரு வெற்றிக் கூட்டணி. மக்கள் போற்றுகின்ற கூட்டணியாக, அனைவருமே ஆதரிக்கின்ற ஒரு கூட்டணியாக சிறந்த முறையில் உங்கள் முன்னாடி நான் வந்து இங்கே நிற்கிறேன். இன்றைக்கு நமது வெற்றி வேட்பாளரான ராமச்சந்திரனுக்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திலே வாய்ப்பு கொடுத்து, அமோக வெற்றியை இந்த தேர்தலில் தர வேண்டும். இந்த வெற்றி கூட்டணி, நாளை நமதே நாற்பதும் நமதே என்று என்னுடைய முதல் உரையிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரையே தன் பெயராகக் கொண்டுள்ளார் வேட்பாளர். மாபெரும் வெற்றியை இரட்டை இலை சின்னத்திற்கு பெற்றுத் தந்து, இந்த கோவை தொகுதி இரட்டை இலையின் வெற்றியை முன்னாள் முதலமைச்சர் பாதத்தில் சமர்ப்பிப்போம்.

வேட்பாளர் ராமச்சந்திரனின் தந்தையை எல்லாருக்கும் தெரியும். 1991-இல் இருந்து 95 வரை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் அவர். தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, பல திட்டங்களை நிறைவேற்றியவர். சிறுவாணி குடிதண்ணீர் திட்டத்தை மக்களுக்காக கொண்டு வந்தவர். இன்றைக்கு அவரது மகன் தலைவருடைய பெயரை தன் பெயராகக் கொண்ட படித்த இளைஞர், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்ல வேட்பாளர் ராமச்சந்திரன். மாநில அளவிலே ஐடி பிரிவு செயலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

கோயம்புத்தூர் நம்பர் ஒன் மாநகராட்சி, அதில எந்த மாற்றுக் கருத்துமே கிடையாது. அந்த அளவு ஒரு சுத்தமான, சுகாதாரமான நகரமாக இருக்கிறது. கோவையில் சிறு குறு தொழில்கள் ஏராளம். இங்கு வேடந்தாங்கலாக எத்தனையோ லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற மாநகரமாக சிறந்து விளங்குகிறது. அதேபோல என்.டி.சி மில்கள் அனைத்துமே இன்றைக்கு மூடப்பட்ட ஒரு அவல நிலையில் கோவையை நாம் பார்க்கும் போது, உண்மையிலே என் மனது வலிக்கிறது.

ஏனென்றால், ஒரு காலத்தில் மிகச்சிறந்து விளங்கிய நகரம் எத்தனையோ கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒரு இடம், இன்றைக்கு இத்தனை ஆலைகளும் மூடப்பட்டு, வேலைவாய்ப்பு என்பதே கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது என்றால், இதற்கு யார் காரணம் என்பது மக்களாகிய உங்களுக்குத் தெரியும்.

சிறு குறு தொழில்கள் அதிகமாக உள்ள கோவை மாவட்டத்தில், 300 சதவிகிதம் மின் கட்டண உயர்வைக் கொண்டு வந்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த கூட்டணியின் சார்பாக எங்களுடைய கண்டனத்தை இந்த நேரத்திலே பதிவு செய்கிறேன். நமது கூட்டணிக் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன், மக்களுக்காக உழைத்து கோவையை மீண்டும் தொழில் நகரமாக்குவார் என்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

இங்கு சிங்காநல்லூர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடி தண்ணீர் வருகிறது. அப்போது இங்கே இருக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் என்ன என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி, கோவை சிறுவாணி தண்ணீர் என்பது உலகப் பிரசித்தி பெற்றது. மக்களுக்கு குடிதண்ணீர் இல்லை என்பது இந்த ஆட்சியின் அவலத்தை நமக்கு தெளிவாக புரிய வைக்கிறது.

இங்கு இருக்கின்ற அனைத்து சாலைகளுமே மிக மோசமாக, குண்டும் குழியுமாக இருக்கின்ற நிலையை நம்மால் பார்க்க முடிகிறது. மத்தியில் ஆளும் கட்சியும், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் மக்களுக்கு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, எந்தவித திட்டங்களையும் செய்யவில்லை என்பது இன்றைக்கு மக்களுடைய குமுறலாக இருக்கிறது.

இந்த அளவு சட்டம் ஒழுங்கு ஒரு பெரிய சீர்கேடாகவும், கஞ்சா புழக்கம் அதிகமாகவும், அதுமட்டுமல்லாமல் எந்த பகுதியில் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் தலைவிரித்து ஆடுவதும், படித்த படிக்காத இளைஞர்களுக்கு யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலையையும் இருப்பதால், இன்றைக்கு தமிழ்நாடே தலைகுனிவாக இருக்கின்ற ஒரு நிலையை நாம் பார்க்க முடிகிறது. எனவே, இந்த நிலைகள் எல்லாம் மாற ராமச்சந்திரன் நாடாளுமன்றத்தில் சென்று, நமது தொகுதிக்கான குரலை அங்கு பதிய வைத்து, கோவை நாடாளுமன்றத் தொகுதியினுடைய அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நெல்லையில் அதிமுக வாக்குகளை குறிவைக்கும் நயினார் நாகேந்திரன்.. கையாளும் யுக்தி என்ன? - Nainar Nagendran Election Campaign

ABOUT THE AUTHOR

...view details