தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு; காலை, மாலை எந்த நேரத்தில் வெடி வெடிக்கலாம்? - CRACKERS BURSTING TIMING

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி தொடர்பான கோப்புப் படம், தலைமை செயலகம்
தீபாவளி தொடர்பான கோப்புப் படம், தலைமை செயலகம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 8:45 PM IST

சென்னை:தீபாவளி என்றால் நினைவுக்கு வரும் புத்தாடை, பலகாரம் , படையல் சாப்பாடு இவற்றில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அலபறிய மகிழ்ச்சியுடன் வாங்குவது பட்டாசு. இந்த பட்டாசுகாக தீபாவளியை எதிப்பார்த்து இருந்த காலம் அனைவரின் வாழ்விலும் நிச்சியம் இருக்கும். ஆனால் இந்த பட்டாசுகள் வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.

முக்கிய வழிகாட்டுதல்:மேலும் பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதன் 23.10.2018ஆம் நாள் நீதிமன்றம் வெளியிட்ட ஆணைபடி சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் செயல்முறை நடைமுறைக்கு வந்தது.

விபத்துக்கள் இல்லாத தீபாவளி:இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் விபத்துகளை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பட்டாசை கையாளும் முறை, விபத்தை தடுக்கும் வகை விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசு பொதுத்துறை பணியாளர்களுக்கு நற்செய்தி.. தீபாவளி போனஸ் இவ்வளவா?

பாதுகாப்பான தீபாவளிக்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன். பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

பாதுகாப்பான தீபாவளிக்கு தவிர்க்க வேண்டியவை:

1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

2. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வேண்டும். வெடிப்பதை தவிர்க்க

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details