திருநெல்வேலி:சென்னையில் இருந்து நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) 11 மணி அளவில், படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட நெல்லை அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து, சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நெல்லை வந்துள்ளது.
இந்த பேருந்தை கோவில்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும், இந்த பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் வரும் வழியில் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் ஏறிய பயணிகள் பலர் பயணித்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 11.20 மணிக்கு நெல்லை வந்த விரைவுப் பேருந்து, நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பணிமனைக்குச் சென்றுள்ளது. அதன் பின்னர், பேருந்தை பணிமனை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதையும் படிங்க:பாபநாசம் அருகே குரங்கு தாக்கியதில் மூதாட்டி உள்பட இருவர் காயம்!