தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொன்ற கொடூரம்; கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு! - Vellore Old Woman Murder - VELLORE OLD WOMAN MURDER

Vellore Old Woman Murder: அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Vellore Old Woman Murder case
வேலூர் மூதாட்டி கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 11:51 AM IST

மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொன்ற கொடூரம்

வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசிக்கடை உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள கடைகளுக்கு வெளியே கூலி வேலை செய்பவர்கள் வேலைக்குப் பின்னர் இரவில் அப்பகுதியில் தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான அரிசி கடைக்கு வெளியே சின்னக் குழந்தை (75) என்ற கூலித் தொழிலாளியான மூதாட்டி இன்று (ஞாயிற்றுக்குழமை) அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது மர்ம நபர் ஒருவர் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்த நபரைப் பிடிக்க முயன்ற நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டி சின்னக் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த குடியாத்தம் நகர போலீசார், அதில் பதிவான காட்சிகளை வைத்து அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நபரை வலைவீசித் தேடிவருகின்றனர். இந்நிலையில், அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையில் கல்லைப் போட்டு மர்ம நபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க:“சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்” - வீட்டுத் தோட்டத்தில் விசிட் அடித்த முதலை! - Crocodile Enters House

ABOUT THE AUTHOR

...view details