தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; தலைமறைவான அரசு மருத்துவரை தேடும் போலீஸ்! - sexual harassment - SEXUAL HARASSMENT

Sexual Harassment : குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில், பயிற்சி மருத்துவ மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த அரசு மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 11:37 AM IST

வேலூர் :வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது நர்சிங் படித்து வரும் மாணவி இரண்டு மாத பயிற்சிக்காக குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இதே மருத்துவமனையில் அரசு மருத்துவப் மருத்துவராகப் பணிபுரியும் மருத்துவர் எஸ்.பாபு என்பவர், இம்மாணவியிடம் நேற்றைய முன்தினம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவி அங்கு பணியாற்றிய செவலியர்கள் மற்றும் சக மாணவிகளிடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையில், நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தி மருத்துவர் பாபு மீது நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான அரசு மருத்துவர் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:மகளிர் விடுதியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; வருத்தம் தெரிவித்த திருச்சி என்ஐடி நிர்வாகம்! - NIT Regret for harassment Issue

ABOUT THE AUTHOR

...view details