சென்னை: சென்னையில் கடந்த ஜூன் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 21 பேரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று அவர்களின் வீட்டின் முகவரிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில், 'நாட்டு வெடிகுண்டுகள் வீசி உங்கள் குடும்பத்தினர் கொலை செய்யப்படுவார்கள் என்றும் குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாகவும்' அதில் குறிப்பிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.