தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு! - காணாமல் போன அரசு பள்ளி மாணவி

Vellore News: வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன அரசு பள்ளி மாணவி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 12:07 PM IST

வேலூர்: குடியாத்தம் கல்லேரி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி கூலிக்கு ஜல்லி உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் ஒரு மகன், 3 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய மகள் அனிதா குடியாத்தத்தில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை மாலையில் இருந்து அனிதா காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து சுப்பிரமணி பல பகுதிகளில் தேடியும் கிடைக்காத நிலையில் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தனது மகள் அனிதா காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த காவல்துறையினர் பல இடங்களில் மாணவியைத் தேடிப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (ஜன.29) குடியாத்தம் கள்ளேரி பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் பயன்பாடற்ற விவசாய கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு சடலம் குறித்து விசாரணை செய்தனர். பின்னர் மகளை காணவில்லை என புகார் கொடுத்த சுப்பிரமணியை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து சடலத்தை அடையாளம் காண கூறியுள்ளனர்.

பின்னர் தீயணைப்பு துறையால் மீட்கப்பட்ட சடலம் தனது மகள் தான் என சுப்பிரமணி உறுதி செய்தார். இதனைதொடர்ந்து மாணவியின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சுப்புலட்சுமி பொறுப்பேற்பு!

ABOUT THE AUTHOR

...view details