சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறையென மூன்றையும் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் திறந்து வைக்கப்பட்ட உணவகத்தில் காவல் ஆணையர் உணவு உட்கொண்டார்.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: "சில துப்புகள் கிடைத்துள்ளன"- சென்னை காவல் ஆணையர்! - பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்
Sandeep rai rathore: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவலர்களின் பணியிட மாற்றம் பணி 90% சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
Published : Feb 12, 2024, 10:53 PM IST
அதன் பின்னர் காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "ஆயுதப்படை-1 வளாகத்தில் காவலர் நலன் சிற்றுண்டி விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக 152 மீட்டர் தூரத்திற்கு மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய காவல் சிற்றுண்டி விடுதி சிறிய இடமாக போதிய வசதி இல்லாமல் இருந்ததால் குளிரூட்டி வசதியுடன் புதிய மேஜைகள் நாற்காலிகள் ஒரே நேரத்தில் 50 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பொருட்கள் வைப்பதற்காக ராஜரத்தினம் மைதானம் அருகில் உள்ள ஆயுதப்படை நிறும அலுவலகத்தின் மாடியில் புதிய வைப்பறை கட்டப்பட்டுள்ளது. மூன்றையும் இன்று(பிப்.12) துவங்கப்பட்டு ஆயுதப்படை காவலர்களுக்கு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான காவலர்களின் பணிமாற்றம்(Transfer) பணிகள் 90% சதவீதம் முடிவுபெற்று உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் குண்டு வைத்திருப்பது தொடர்பாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் விசாரணையில் சில துப்புக்கள் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.