சென்னை: பூந்தமல்லி அருகே செவிலியருக்கு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் விசராணையில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (28). இவர் மேளம் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் சென்னையில் உள்ள செவிலியர் பாலிடெக்னிக்கில் படிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக, சிறுமியின் பெற்றோர்கள் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:தாம்பரம் அருகே ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு.. அச்சத்தில் பொதுமக்கள்!
புகாரின் அடிப்படையில், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்துள்ளனர். விசாரணையில் வெங்கடேசன் தங்கை படிக்கும் செவிலியர் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறுமி படித்து வந்துள்ளார். தோழியின் வீட்டிற்கு சென்றபோது, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக வெங்கடேசன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
தொடர்ந்து, வெங்கடேசன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.