சென்னை: சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை பொருள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டு, தனிபடைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்,
சென்னை அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு, அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவில் காருக்குள் சிலர் மெத்தபெட்டமைன் போதை பொருள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த காரைச் சுற்றி வளைத்து சோதனை செய்தபோது, காருக்குள் மூன்று பேர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் இருந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க:என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் வீடு உள்பட 10 இடங்களில் 100 போலீசார் தீவிர சோதனை...
மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணைக்கு மேற்கொண்ட போது, சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஹரி (29), அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த பிரசாந்த் (29), ராயப்பேட்டையை சேர்ந்த ஐசக்கீர்த்தி ஐரிலண்டு (30) என தெரிய வந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், மேடவாக்கம் எச்பி கேஸ் கிடங்கு அருகில் காரில் மெத்தம்பெட்டமைன் பொதைபொருளை விற்பனை செய்து கொண்டிருந்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா குமார் (30), மூலக்கடையைச் சேர்ந்த தமிழரசன் (40), அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ராஜா விக்ரம் (31), கேகே நகரைச் சார்ந்த தினேஷ் (28) காவாங்கரை பகுதியைச் சேர்ந்த ரஹீம் பாஷா (30),கொடுங்கையூரைச் சேர்ந்த சாலமன் (23) ஆகிய ஆறு நபர்களை கைது செய்தனர்.
இதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பல வருடங்களாக சென்னையில் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் ஆகியோரை குறிவைத்து மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்று வந்ததும், இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் இதை சென்னைக்கு கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு கும்பலிடம் இருந்து சுமார் 4. 84 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ஒன்பது நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்