திருவண்ணாமலை: உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் திருவண்ணாமலை மலை மீது அனுமதிக்கப்பட்ட பகுதியில் நாட்கள் கணக்கில் தியானம் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சடோஷி மினெட்டா (62) (Satoshi Mineta) என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருவண்ணாமலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இவர் கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரம விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், மே 5ஆம் தேதி மாலை விடுதியில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, இது குறித்து திருவண்ணாமலை நகர போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், அந்த நபர் வேறு ஏதேனும் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளாரா? எங்கே சென்றிருப்பார்? என்ற பல்வேறு கோணங்களின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.