தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை, இலங்கை கடலோர கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அந்த 22 மீனவ குடும்பங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும், மீனவர்கள் பிரச்னை குறித்து ஆலோசனைக் கூட்டத்தையும் தருவை குளத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்தினார். இதில் கலந்துகொண்ட மீனவர்கள் மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "22 மீனவர்களும் வெளியே வரும் வரை இலங்கை தூதரகம் வாயிலில் உட்காருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஏற்கனவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது, சாப்பாடு இல்லாமல் பட்டினியோடு இருக்கின்றோம். இதுவரை மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தமிழகத்தில் உள்ள எந்த மீனவர்களும் பாதிக்கப்படக்கூடாது. ஆகவே, போராடத் தயாராக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர், திலகபாமா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "இலங்கை மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். முதலில் 22 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த 22 மீனவர்களுடைய குடும்பத்திற்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.