தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது பாமக! - PMK BJP Alliance

PMK -BJP Alliance: பாஜகவுடன் கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அதனை உறுதி செய்துள்ளார்.

pmk-announcement-on-parliament-alliance
ராமதாஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 7:12 PM IST

Updated : Mar 18, 2024, 11:02 PM IST

சென்னை:வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து பாமக களம் காண உள்ளதாக, பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூறியிருப்பது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது.

தேர்தலுக்கு ஒரு மாத கால அவகாசம் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தனது கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்ட நிலையில் பாஜக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணி குறித்து உறுதி படுத்தாமல் இருந்து வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த குழலில் பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பாமகவுடன் தங்கள் கூட்டணியை உறுதிபடுத்த முயற்சித்து வந்தன. இதையடுத்து அதிமுக பாமக இடையே கூட்டணி இறுதியாக உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்துள்ள சம்பவம் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணான், மக்களவைத் தேர்தலை பாஜகவுடன் சேர்ந்து சந்திப்பது என்றும், இந்த முடிவு கட்சியின் நலனுக்காக எடுக்கப்பட்டது எனவும் நிறுவனர் ராமதாஸ் அறிவித்ததாக கூறியுள்ளார்.

வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 மக்களவைத் தொகுதியும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதிவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டுவரும் நிலையில், சேலத்தில் நாளை நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கூட்டணி குறித்து தலைமையில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாஜக - பாமக கூட்டணி குறித்த இந்த செய்தி அதிமுக மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "கூட்டணி அமைக்க முடியாதவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது" - திருமாவளவன்!

Last Updated : Mar 18, 2024, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details