தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்த விஷயம் மட்டும் நடந்தால் திமுக ஆட்சி கலைந்துவிடும்" - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! - Anbumani Ramadoss - ANBUMANI RAMADOSS

Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டால் அன்றைய தினமே திமுக ஆட்சி கலைந்து விடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 8:26 PM IST

சேலம்: வன்னியர் சமுதாய இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமியின் குடும்பத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புதிய வீடு கட்டிக்கொடுத்துள்ளார். ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினை இன்று அன்புமணி ராமதாஸ் குப்புசாமியின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டால் அன்றைய தினமே திமுக ஆட்சி கலைந்து விடும். தமிழக முழுவதும் மிகப் பெரிய கலவரம் வெடித்து பதற்றமான சூழல் உருவாகும். பல்வேறு கட்ட போராட்டங்கள் மூலமாக கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

69 சதவீதத்திற்கு மேல் தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் மக்கள் உள்ளார்கள் என்று நிரூபிக்க வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நிலை நாட்ட முடியும். அதை நிருபிக்காவிட்டால் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிடும். இது முதல்வருக்கு நன்கு தெரியும் அவர் வேண்டுமென்றே கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளார். சமூக நீதிக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே இல்லை. கூட்டணியில் உள்ள கட்சிகள் சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவை வலியுறுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள பாமக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதவாது, “தமிழகத்தில் மிக மிக பின்தங்கிய மாவட்டம் தருமபுரி. இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனை நீர். மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை காவிரி நீர் ஆண்டுதோறும் கடலில் கலக்கிறது.

அதில் இரண்டு டிஎம்சி நீரை நீரேற்று திட்டத்தின் மூலம் கொண்டு வந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் நிரப்ப வேண்டும். அப்படி சேர்த்தால் நீர்மட்டம் உயரும், வேலைவாய்ப்பு உருவாகும், விவசாயம் செழிக்கும். மூன்று லட்சம் பேர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் மீண்டும் இங்கு வருவார்கள், பொருளாதாரம் பெருகும், மாவட்டம் வளர்ச்சி பெறும்.

கடையடைப்பு ஆர்ப்பாட்டம்: தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி மாவட்டம் முழுமையாக அரை நாள் அடையாள கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:த.வெ.க.வுக்கு டபுள் டமாக்கா.. தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details