தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எங்கள் முதல்வரிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்க பிரதமரே" - செல்வப்பெருந்தகை விளாசல்! - tamil nadu congress protest - TAMIL NADU CONGRESS PROTEST

selva perundurai slams pm modi: ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 12:55 PM IST

சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணித்திருப்பதை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, செல்வப்பெருந்தகை நிகழ்த்திய கண்டன உரையில், "நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கலாமா? எதற்காக நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை? ஆந்திராவிற்கும், பீகாருக்கும் வாரி வாரி வழங்கிய நிதி தமிழ்நாட்டுக்கு எங்கே? பீகார் மாநிலத்தின் ஜிஎஸ்டி பங்களிப்பு 1,950 கோடி. ஆனால் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி பங்களிப்பு 20 ஆயிரம் கோடிக்கு மேல். தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது பத்து விழுக்காடு கூட ஜிஎஸ்டி செலுத்தாத பீகாருக்கு நிதிநிலை அறிக்கையில் சிறப்பு நிதி வாரி வாரி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்றாண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை நடத்தி வருகிறார். இதற்கு சான்றாக தான் பாஜக கூட்டணியை புறக்கணித்து இந்தியா கூட்டணி வெற்றி பெற வைத்தார்கள். இதன் காரணத்தினால் கோபம் கொந்தளித்து நரேந்திர மோடி, நிதித்துறை அமைச்சரிடம் தமிழ்நாட்டிற்கு நிதியை ஒதுக்காதீர்கள், புறக்கணியுங்கள் என்று கூறியிருக்கிறார். 2026க்கு முன்னோட்டமாக பாஜக எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு தமிழ்நாட்டு மக்களை மீண்டும் மீண்டும் உஷார்படுத்தி உள்ளது.

அயோத்தியில் நீங்கள் ராமர் கோவில் கட்டினாலும் படுதோல்வி அடைந்துள்ளீர்கள். பாசிச கட்சிக்கு இடம் இல்லை என்பதற்கு சான்றாகத்தான் அயோத்தியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டை புறக்கணிக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்களை நடுவீதியில் நிறுத்த வேண்டும் என்று மோடி கணக்கு போடுகிறார். நீங்கள் என்ன கணக்கு போட்டாலும் இந்திய அளவில் தமிழ்நாட்டை காப்பதற்கு எங்கள் தலைவர் ராகுல் காந்தியும், தமிழ்நாட்டு அளவில் எங்களுடைய முதலமைச்சர் ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்களை சீர்தூக்கி பார்ப்பார்களே தவிர, நீங்கள் நிதி கொடுக்கவில்லை என்பதால் தமிழ்நாட்டு மக்களை வீதியில் விடமாட்டார்கள். ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

முதல்வர் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளார்கள். முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து இந்தியா கூட்டணி உள்ளது. இதை யாரும் அசைக்க முடியாது. கூட்டணி என்பதையெல்லாம் எங்கள் தலைமை தான் முடிவு செய்ய முடியும். வேறு யாரும் முடிவு செய்ய முடியாது. காங்கிரசுக்குள் ஒரு பிரச்சினையும் கிடையாது'' என செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க:மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக 2 கோடி மோசடி.. சென்னையில் இரு பெண்கள் கைது..!

ABOUT THE AUTHOR

...view details