தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு! - tirupathur Collector Office - TIRUPATHUR COLLECTOR OFFICE

Tirupathur Collector Office: வாணியம்பாடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சாமு என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.

மனு அளிக்க வந்த மக்கள்
மனு அளிக்க வந்த மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 9:57 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜவ்வாது ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாமு (75). இவர் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார்.

தேவபிரகாஷ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த மனுவில்,"அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன்கள் மோகன் குமார், சீனிவாசன், முகேஷ் கண்ணா ஆகிய மூன்று பேரும் ஒன்று சேர்ந்து புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே காலகாலமாக பயன்படுத்தி வந்த வழியை விடாமல் தடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.

எனவே ஆதிகாலத்தில் இருந்து பயன்படுத்தி வந்த இந்த பாதையை மீட்டு பொதுமக்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனவும், மேலும் ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த தேவ பிரகாஷ் கூறியதாவது, "அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த 3 நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து அந்த நிலத்தை மீட்டு, பொதுமக்கள் செல்ல வழிவகை செல்ல வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க :உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நாப்கின் பயன்பாட்டு வசதி; நீதிபதி குழு அரசுக்கு பரிந்துரை! - TN Education Policy Committee

ABOUT THE AUTHOR

...view details