சேலம்:பெரியார் பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர்.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில்,"சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக் கழகம் சார்பில் நான்கு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நான்கு பேரும் பதவி உயர்வு பெற்று விட்டபடியால் இவை காலியாக உள்ளது. ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி காலியானவர்களை வைத்து பட்டமளிப்பு விழா நடத்துவது சட்டத்திற்கு முரணானது. ஆகவே பணிமூப்பின் அடிப்படையில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களை துணை வேந்தர் வரும் திங்கள் கிழமைக்குள் நியமிக்க வேண்டும்.