தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: பெரம்பலூரை கைப்பற்றிய திமுக! - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Perambalur Election Results 2024 : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் அருண்நேரு அபார வெற்றி பெற்றுள்ளார். மேலும், பெரம்பலூரில் பதிவான வாக்குகளின் முழு விபரத்தை காணலாம்..

பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்கள்
பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்கள் (credits - ETV Bharat Tamil NADU)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:59 PM IST

பெரம்பலூர்:பெரம்பலூர்மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அருண்நேரு அதிமுக வேட்பாளர் சந்திர மோகனை விட 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வ.எண் வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
1 அருண் நேரு திமுக 6,03,209
2 சந்திர மோகன் அதிமுக 2,14,102
3 பாரி வேந்தர் பாஜக 1,61,866
4 தேன்மொழி நாதக 1,13,092

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில்,14- வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேரு - 422495 லாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்தார். அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் - 148705, ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் - 112556 மற்றும் நாம் தமிழர். வேட்பாளர் தேன்மொழி - 78778 வாக்குகளும் பெற்றனர். அதிமுக வேட்பாளரை விட 2,73,790 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் அருண்நேரு முன்னிலை வகித்தார்.

பெரம்பலூர் தொகுதியில் மதியம் 12:30 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் அருண் நேரு 1,99,023 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்தார். அதிமுகவின சந்திரமோகன் 73,127, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஐஜேகே வேட்பாளர் 54,280 மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 38,446 வாக்குகளும் பெற்றனர்.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், அதிமுக சார்பில் என்.டி.சந்திரமோகன், நாதக சார்பில் ஆர்.தேன்மொழி ஆகியோர் போட்டியிட்டனர்

பெரம்பலூர் தொகுதியில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்தார்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு

திமுக வேட்பாளர் அருண் நேரு - 29,276

அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் - 10,464

பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் - 7907

நாதக வேட்பாளர் தேன்மொழி - 5691

இரண்டாம் சுற்று முடிவு:இந்நிலையில் காலை 10.23 மணி நிலவரப்படி, இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 38,683 வாக்குகளுடன் முன்னிலையில் நீடித்தார்.

வ.எண்கட்சி பெயர்பெற்ற வாக்குகள்
1. திமுக (அருண் நேரு) 29,697
2. அதிமுக (சந்திரமோகன்) 9826
3. ஐஜேகே (பாரிவேந்தர்) 8270
4. நாதக (தேன்மொழி) 5764

மூன்றாம் சுற்று முடிவு:58,096 வாக்குகள் வித்தியாசத்தில் அருண் நேரு முன்னிலை

வ.எண்கட்சி பெயர்பெற்ற வாக்குகள்
1. திமுக (அருண் நேரு) 29,340
2. அதிமுக (சந்திரமோகன்) 9,927
3. ஐஜேகே (பாரிவேந்தர்) 7,718
4. நாதக (தேன்மொழி) 5,558

நான்காம் சுற்று முடிவு:79,742 வாக்குகள் வித்தியாசத்தில் அருண் நேரு முன்னிலை

வ.எண்கட்சி பெயர்பெற்ற வாக்குகள்
1. திமுக (அருண் நேரு) 29,749
2. அதிமுக (சந்திரமோகன்) 8,103
3. ஐஜேகே (பாரிவேந்தர்) 8,115
4. நாதக (தேன்மொழி) 5,281

கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இம்முறை பாஜக கூட்டணியில் போட்டியிட்டிருந்தார். 2019 தேர்தலில் மொத்தம் 11,02,767 (80.9%) வாக்குகள் பதிவான நிலையில், 2024 தேர்தலில் 11,19,881 (77.43%) வாக்குகள் பதிவாயிருந்தன.

2019 தேர்தல் வெற்றி நிலவரம்:கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐஜேகே கட்சித் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்றதுடன் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட என்.ஆர். சிவபதிக்கு 2,80,179 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சியின் சாந்தி 53,545 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட எம்.ராஜசேகரன் 45,591 வாக்குகளும் வாங்கினர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; திமுக Vs பாஜக - இருமுனைப் போட்டியில் பெரம்பலூரை கைப்பற்ற போவது யார்? - Perambalur Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details