தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொய் சாட்சி சொல்லுமாறு மிரட்டும் தனிப்படை போலீசார்?.. ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்.. பொள்ளாச்சியில் நடப்பது என்ன? - police threatening people - POLICE THREATENING PEOPLE

Police officers threats to give false witness: பொள்ளாச்சி அருகே ரூபேஷ் என்பவர் மீதான வழக்கிற்கு தாங்கள் சொல்லும்படி சாட்சி கூறும்படி போலீசார் மிரட்டியதாக எழுந்துள்ள புகார் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள்`
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 9:18 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அறிவொளி நகர் பகுதியில் செல்வராஜ் மற்றும் சக்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களது உறவினர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்த வழக்கு தொடர்பாக தாலுகா காவல் நிலையம் வந்துள்ளனர்.

அப்போது, அவர்களிடம் போலீசார் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வராஜ் என்பவரது வீட்டிற்குச் சென்ற தனி பிரிவு காவலர் ஒருவர், 2017ஆம் ஆண்டு கேரள போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மாவோயிஸ்ட் ரூபேஷ் என்பர் மீதான வழக்கு 26 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

நீங்கள் இருவரும் ஆஜராக வேண்டும் எனக் கூறி, நீதிமன்ற கடிதத்தையும் அவர்களிடம் வழங்கிவிட்டுச் அந்த காவலர் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, செல்வராஜ் மற்றும் சக்தி ஆகியோரை தனி பிரிவு காவலர் கோவை நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல ஆஜர்படுத்த, வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த சில அடையாளம் தெரியாத தனிப்பிரிவு காவலர்கள் மாவோயிஸ்ட் ரூபேஷ் குறித்து தாங்கள் கூறும் சாட்சியங்களை நீதிபதியிடம் சொல்லும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த இருவரும் கிராம மக்களுடன் இணைந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளனர். மேலும், காவலர்கள் தங்களை மிரட்டி, அவர்கள் கூறும் டி சாட்சி சொல்ல வற்புறுத்துவது வேதனை அளிப்பதாகவும் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: அல்கொய்தா ஆதரவு கொண்ட மேற்குவங்க பயங்கரவாதி சென்னையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details