தஞ்சாவூர்:கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையை மாற்று இடத்தில் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், இந்த பிரச்சனையில் விரைந்து நல்ல முடிவு எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பொது மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கோட்டாட்சியரிடம் மனு அளித்த கும்பகோணம் மாநகர் 23வது வட்டம் மாமன்ற உறுப்பினர் பிரதீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ கும்பகோணம் மாநகர் 23வது வட்டம், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜான் செல்வராஜ் நகரின் வழியாக பெரும்பான்மை பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்கிறது. கும்பகோணம் மாநகரில் மொத்தமுள்ள 8 அரசு மதுபான கடைகளில், 4 இதே நகரில் ஒரே வீதியில் அமைந்துள்ளது.
இதனை அகற்றிட கோரி கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில், ஜான் செல்வராஜ் நகர் பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவு வாயிலுக்கு எதிரே இந்த 4 கடைகளில் ஒன்று இயங்கி வருகிறது.
இதையும் படிங்க:பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? - தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!