தருமபுரி:தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பென்னாகரம் பகுதி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் உள்ளிட்டோர் தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் இந்த மனு குறித்து கிராம மக்கள் அளித்த பேட்டியில், “தங்கள் பகுதியைச் சார்ந்த மதுப் பிரியர்கள், மதுபானக் கடை அருகில் இல்லாததால் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுபான கடைக்கு, சென்று வருவதால் நேரம் வீணாவதாகவும், அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, என்றும் அருகிலேயே மதுக்கடை இருந்தால் அவர்களை தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுவோம்” என்றும் பேட்டி அளித்திருந்தார்.
அதேபோல், மதுப்பிரியர் பேசும்போது, “தங்கள் பகுதிக்கு மதுக்கடை வேண்டும், மதுக்கடை அமைத்தால் அருகில் உள்ள மதுக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, தங்கள் கால்நடைகளை பராமரிக்க, நேரம் கூடுதலாக கிடைக்கும். மேலும் பதினைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து மது அருந்த செல்வதால் நேரம் வீணாவதாகவும், சில நேரங்களில் சந்து கடைகளில் வாங்கி குடிப்பதால், செலவு அதிகமாக வருகிறது” எனப் பேட்டியளித்து இருந்தார்.