தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றுக்குள் விழுந்த தேசிய பறவையை இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்ட தீயணைப்பு வீரர்கள்! - Tirupattur Rescued Peacock - TIRUPATTUR RESCUED PEACOCK

Peacock Rescued From Farm Well: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இரை தேடி விவசாய நிலத்திற்குள் வந்த மயில் இரண்டு நாட்களாக கிணற்றுக்குள் விழுந்து கிடந்த நிலையில், இன்று தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்டகப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மயிலை மீட்ட தீயணைப்பு துறை குழுவினர்
மயிலை மீட்ட தீயணைப்பு துறை குழுவினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 9:15 PM IST

திரும்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செங்குரான்பட்டறை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நடராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள 60 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் மயில் அகவியப் படி தண்ணீரில், மிதந்து கிடைப்பதை கண்ட ராதாகிருஷ்ணன், உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கிணற்றுக்குள் விழுந்த மயிலை மீட்கும் தீயணைப்பு துறையினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விவசாய கிணற்றில் விழுந்து கிடந்த ஆண் மயிலை பாதுகாப்பாக, உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட ஆண்மயிலை வன அலுவலர் வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு, அந்த மயிலைக் கொண்டு சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் மாம்பாக்கம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் விடப்பட்டது. மேலும் இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், “ இந்த பகுதியில் இருக்கும் மயில்கள் இரை தேடி இந்த விவசாய நிலங்களுக்குள் வருவது வழக்கம். அப்படி இரை தேடி வந்த மயில் தவறி கிணற்றில் விழுந்துள்ளது, மேலும் இரண்டு நாட்களாக இந்த மயில் கிணற்றிக்குள் சிக்கியதாக தெரிகிறது, இந்நிலையில் இன்று நல்வசமாக மயில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:மரத்தில் சிக்கியிருந்த ராஜ நாகம்; லாவமாக பிடித்த வனத்துறை ஊழியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details