தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வகுப்பறையை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியர்.. டிசி வாங்கிய பெற்றோர்.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன? - school girl issue - SCHOOL GIRL ISSUE

Mayiladuthurai School: மயிலாடுதுறையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் வகுப்பறையை கூட்டாமல் சென்ற மாணவியை ஆசிரியர் அடித்ததாக புகார் தெரிவித்த பெற்றோர், பள்ளியில் வாக்குவாதம் செய்து ஒழுக்கம் என்ற பெயரில் மாணவிகளை கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டி, மாணவியின் டிசியை பெற்றுச் சென்றுள்ளனர்.

மாணவியின் புகைப்படம்
மாணவியின் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 6:58 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையைச் சேர்ந்த 14 வயது மாணவி, பூம்புகார் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

மாணவி பேட்டி (credits-ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், நேற்று முதல் நாளாக மாணவி பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர், பள்ளி முடிவடைந்து வீட்டிற்குச் செல்லும் போது ஆசிரியை ஒருவர் வகுப்பறையைக் கூட்ட சொல்லியுள்ளார். அப்போது, வெளியில் வேன் நிற்பதாகவும், வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் மாணவி கூறியதால், ஆசிரியர் மாணவியின் கன்னத்தில் அடித்துவிட்டதாக வீட்டுக்குச் சென்ற மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து, இன்று மாணவியை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்த பெற்றோர், படிக்க வந்த தங்கள் மகளை எப்படி கூட்டச் சொன்னீர்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாணவியை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி மாணவியின் டிசியை பெற்றுச் சென்றனர். மேலும், ஒழுக்கம் என்ற பெயரில் பள்ளி நிர்வாகத்தினர் மாணவிகளை கொடுமைப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், நேற்று பள்ளியில் மதியம் 3.30 மணியிலிருந்து ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதாகவும், வகுப்பறைக்கு ஆசிரியர்கள் ஒருவரும் செல்லவில்லை என்றும், மாணவியை யாரும் அடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பள்ளியில் உள்ள வகுப்பறைகளை ஒவ்வொரு நாளும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது வழக்கம் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தாளவாடி மலை கிராமத்தில் மர்ம நோய் தாக்கி 6 பேர் பலி; மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details