தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளி கொலை.. தஞ்சையில் பரபரப்பு! - கொலை வழக்கில் பெயிண்டர் கைது

Thanjavur Murder: இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை, பெயிண்டர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A laborer was stabbed to death by a painter in a dispute over two-wheeler parking
இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை பெயிண்டர் கத்தியால் குத்தி கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 1:24 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன் (32). கூலித் தொழிலாளியான இவரது வீட்டிற்குப் பக்கத்து வீட்டில், பெயிண்டர் குணசேகரன் (42) வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால், மோட்டார் சைக்கிளை நிறுத்துவதில் இவர்கள் இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, குணசேகரன் வீட்டின் முன்பு தர்ஷன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது வீட்டிற்கு வந்த குணசேகரன், தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து, இது தொடர்பாக தர்ஷனுக்கும், குணசேகரனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் வாய்த் தகராறு முற்றிக் கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரம் அடைந்த குணசேகரன் கத்தியால் தர்ஷனை சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே தர்ஷன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்துள்ளார். இதனை அடுத்து, தர்ஷனின் நிலையைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (மார்ச் 10) தர்ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தஞ்சாவூர் போலீசார், தர்ஷன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது குணசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி.. காலாப்பட்டு சிறையில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details