தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தின் மீது அமர்ந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்.. வைரலாகும் வீடியோ! - PACHAIYAPPAS STUDENTS atrocity - PACHAIYAPPAS STUDENTS ATROCITY

Pachaiyappa's College Freshers Day: புதிய கல்வி ஆண்டிற்கான ஃப்ரஷர்ஸ் டே கொண்டாட்டமாக பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்து புதிய மாணவர்களை வரவேற்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 5:08 PM IST

சென்னை:சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஃப்ரஷர்ஸ் டே கொண்டாடப்பட்டது. அந்த கல்லூரியில் படித்து வரும் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களுக்கான ஃப்ரஷர்ஸ் டே கொண்டாத்தில் அன்று இறங்கியிருக்கின்றனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

பூவிருந்தவல்லி பகுதியில் இருந்து பிராட்வே செல்லக்கூடிய தடம் எண் 53 பேருந்தில் ஏறி, புதிய மாணவர்களை அந்த பேருந்தில் அழைத்து வந்தனர். அப்போது பேருந்து கூரை மீதும் ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு அருகே பேருந்து வந்தவுடன் பேருந்தில் பயணித்த அனைத்து மாணவர்களும், பேருந்து முன் வந்து பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.

இதனால் சாலையில் சென்ற பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்ட நிலையில், அந்த பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவ்வாறு மாணவர்கள் காவல்துறையினர் முன்னரே அட்டகாசம் செய்தனர். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அருண் நேற்று (ஜூலை 8) பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், மாணவர்கள் இதுபோன்று அட்டகாசத்தில் ஈடுபடுவதை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வத்துள்ளனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:“ரவுடிகளை ஒடுக்க அவர்களது மொழிகளிலேயே நடவடிக்கை எடுப்பேன்” - சென்னை புதிய காவல் ஆணையர் அருண் சபதம்!

ABOUT THE AUTHOR

...view details