தஞ்சாவூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வைத்திலிங்கம் கூறியதாவது, “எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம். அதிமுகவின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான். அதன்படி, அதிமுக இணைந்து 2026-ல் ஆட்சிக்கு வரவேண்டும். அதிமுக வரலாறு பற்றி பேசுவதற்கு இங்கு என்னைவிட யாருக்கும் தகுதி இல்லை.