நீலகிரி:மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்கத் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதே போல் இந்தாண்டின் கோடை சீசன் தற்போது துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, உதகைக்குச் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
தற்போது தொடர் விடுமுறை காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை சீசனுக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதேபோன்று பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மலர் தொட்டியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்ச் செடிகளில் துலீப் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.
இதையும் படிங்க:கண்கலங்க வைக்கும் தருணம்.. நடுரோட்டில் உயிரிழந்து கிடந்த குட்டி யானைக் கண்ட தாய் யானையின் பாசப் போராட்டம்! - DEATH OF BABY ELEPHANT