தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு ஊழியர் போக்சோவில் கைது! - POCSO ACT

சென்னை பல்லாவரம் பகுதியில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்லாவரம் காவல் நிலைய போர்டு, கோப்புப்படம்
பல்லாவரம் மகளிர் காவல் நிலைய போர்டு, கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 8:09 PM IST

சென்னை : சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (51). இவர் அரசு கால்நடை பராமரிப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மதுபோதையில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக பல்லாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் முரளியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது.

இதையும் படிங்க :"மனித உரிமைகள் ஆணைய தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு" - டிஜிபியிடம் வழக்கறிஞர் சங்கம் மனு!

பின்னர் முரளி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details