தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் ரூ.15,65,000 மோசடி.. ஒருவர் கைது! - MONEY FRAUD CASE

தூத்துக்குடியில், Saxo என்ற செயலி மூலம் ரூ.15,65,000 பணம் மோசடி செய்த நபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

கோப்புப்படம், கைது செய்யப்பட்ட நபர்
கோப்புப்படம், கைது செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 9:47 PM IST

தூத்துக்குடி : தூத்துக்குடியில், Saxo என்ற செயலி மூலம் ரூ.15,65,000 பணம் மோசடி செய்த நபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோமதிபாய் காலனியைச் சேர்ந்த ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் முதலீடு சம்பந்தமாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த நபரை தொடர்பு கொண்டுள்ளார். அந்த மர்ம நபர் Saxo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி ரூ.15,65,000 பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன் மற்றும் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி செய்த மர்ம நபர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க :வாலாஜாபேட்டையில் ரூ.1.31 கோடியில் புனரமைக்கப்பட்ட ஆங்கிலேயர் கால குளம்.. திறப்பு எப்போது?

அந்த உத்தரவின் பேரில், போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு குலிமாவ் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டீஸ்வரன் (38) என்பவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பெங்களூரு சென்று பாண்டீஸ்வரனை கைது செய்து அவரிடமிருந்து 21 செல்போன்கள், ஒரு லேப்டாப், ரொக்கப் பணம் ரூ.40,000, ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு கார் போன்றவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நேற்று (நவ 3) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் IV-ல் ஆஜர்படுத்தப்பட்டு பாண்டீஸ்வரனை தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தேவையில்லாத செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details