தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியின் திருமணத்தை மீறிய உறவு.. கணவருக்கு வந்த வீடியோவால் அதிர்ச்சி! - finance company employee arrest - FINANCE COMPANY EMPLOYEE ARREST

finance company employee arrest :அரியலூர் பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி கொலை மிரட்டல் விடுத்த தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நிதி நிறுவன ஊழியர் சிவா புகைப்படம்
கைது செய்யப்பட்ட நிதி நிறுவன ஊழியர் சிவா புகைப்படம் (credit - ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 3:05 PM IST

அரியலூர்:ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருக்காளங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிக்கும், வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் சிவா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக சிவா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சிவாவின் அழைப்பை அப்பெண் நிராகரித்துள்ளார். அதன் பின்னர், அப்பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவா, அப்பெண்ணுடன் இருந்த தனிமை வீடியோவை வைத்து மிரட்டியுள்ளார்.

மேலும், சிவா தன்னிடம் உள்ள வீடியோவை அவரது கணவர் முருகனுக்கு அனுப்பியுள்ளார். வீடியோவைப் பார்த்த முருகன் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் போலீசார், சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவடி அடுத்த பட்டாபிராம் மின் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..! - Pattabiram EB Fire Accident

ABOUT THE AUTHOR

...view details