தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ஷிப்பிங் மோசடி.. மேனேஜருக்கே விபூதி அடித்த கோவை கும்பல்.. பின்னணி என்ன? - coimbatore shipping fraud

thoothukudi Private Export Company: தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி நிறுவன மேலாளரிடம் வெளிநாட்டிற்கு கண்டெய்னர்கள் அனுப்பும் புக்கிங் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

கைதான ரபீக் சர்தார்
கைதான ரபீக் சர்தார் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 2:22 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (49) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், மணிகண்டனிடம் கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ரகில் (26), ரபிக் சர்தார் (38) மற்றும் சர்தாரின் மனைவி பாசுரோஸ்னாரா (55) ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் ஷிப்பிங் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கண்டெய்னர்களை புக்கிங் செய்தால் மார்க்கெட் ரேட்டை விட கம்மியாக செய்து தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய மணிகண்டன் ரஷ்யாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்வதற்கு 16 கண்டெய்னர்களை புக்கிங் செய்து, அதற்குரிய ரூபாய் 38,49,000 பணத்தை வங்கிக் கணக்கின் மூலம் செலுத்தியுள்ளார்.

ஆனால், கோவையை சேர்ந்த ஷிப்பிங் ஆட்கள் 16 கண்டெய்னர்களில், 6 கண்டெய்னர்களுக்கு மட்டுமே மணிகண்டன் நம்புவதற்காக டெலிவரி செய்த ரசீதை அனுப்பி விட்டு மீதம் உள்ள 10 கண்டெய்னருக்கு மணிகண்டனிடம் வாங்கிய பணத்தை சரியான முறையில் டெலிவரி ஏஜென்டிடம் கட்டாமல் இருந்துள்ளனர்.

இதனால் 10 கண்டெய்னர்கள் டெலிவரி ஆகாமல் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் துறைமுகத்தில் இருப்பதற்கு அபராதம் விதிக்கப்பட்டதால் ரூபாய் 75,00,000 பணம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மணிகண்டன் சர்தார் தரப்பிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு மேற்பார்வையில், ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகசுந்தரம், தலைமை காவலர்கள் வேல்ராஜ் மற்றும் கோபால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ரபீக் சர்தார் என்பவரை கோயம்புத்தூரில் வைத்து கைது செய்து, தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போனில் வந்த மிரட்டல்.. 67 லட்சம் உடனே டிரான்ஸ்பர்.. கோவை தொழிலதிபரை நடுங்க வைத்த ம.பி.கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details