திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்தவர் கண்ணம்மாள்.
இவரது கணவர் சுப்பையன் என்பவர் உயிரிழந்த நிலையில், இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கண்ணம்மாள் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கியுள்ளனர். பின்னர் கண்ணம்மாள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவரின் கைகள் மற்றும் கால்களைக் கட்டிப் போட்டு பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:'ரேர் பீஸ் சேட்டா'.. இல்லாத இரிடியதுக்கு 2 கோடி.. கேரளா தொழிலதிபருக்கு கோவையில் அடிச்ச ஷாக்!
இன்று காலை கண்ணம்மாளின் வீடு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பல்லடம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு கண்ணம்மாள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதனையடுத்து மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பீரோவில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகள் மதிப்பு எவ்வளவு? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்தில் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்