சென்னை:ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து விரதம் கடைபிடித்து நோன்பு இருந்து வருகின்றனர். இந்த நிலையில், ரமலான் நோன்பை கடைப்பிடித்த 93 வயதுடைய சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரஷியா பேகம் என்பவர், கடந்த புதன் கிழமை (மார்ச் 20) மாலை நோன்பை முடித்து, நோன்புக் கஞ்சி அருந்தியபோது, அவர் அணிந்திருந்த பல் செட் கழன்று, உணவுக் குழாயில் சென்று அடைத்துக் கொண்டது.
கொக்கி போன்ற வடிவமைப்பைக் கொண்ட பல்செட், உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டதால் அவர் வலியால் துடித்துள்ளார். வலி தாங்காமல் துடித்த தாயை, அவரது மகள் ஷாகீர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, மூச்சு விட முடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர், அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.