சென்னை:சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் கேஸ் விலை குறித்த அறிவிப்பைப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எதிர்பார்த்துக் காத்து இருப்பர். இந்த நிலையில், கடந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியானது, இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக, கேஸ் விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறப்பட்டது.
வணிக சிலிண்டர்களின் விலை:இந்த நிலையில் 19 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் கடந்த மாதம் 1960.50 ரூபாய் இருந்தது. இந்த விலை தற்போது ரூ.30.50 குறைந்து ரூ.19.30 விற்பனை செய்யப்படுகிறது.