சென்னை:சென்னை ஐஐடியில் (IIT Madras) ஆர்ஜிபி ஆய்வகம் ஒடிசா மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக, தரவுகளின் அடிப்படையில் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள கூட்டுச் சேர்ந்துள்ளது. இது உத்தி மற்றும் ஆதாரம் சார்ந்த அணுகுமுறைகள் மூலம் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையின் பகுதியாகும்.
சென்னை ஐஐடி ஆர்பிஜி ஆய்வகமும், ஓடிசா மாநிலத்தின் வர்த்தகம், போக்குவரத்து, எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிபூதி பூஷன் ஜெனாவின் தொலைநோக்குத் தலைமையில் இயங்கும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறையும் கையெழுத்திட்டுள்ளன. ஆர்பிஜி ஆய்வகத்தின் ‘5இ மாதிரி- போக்குவரத்து பாதுகாப்புக் கட்டமைப்பின் (Transportation Safety Framework – TSF) அடிப்படையில் இந்த முன்முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொறியியல், கல்வி, அமலாக்கம், அவசர சிகிச்சை ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கி இருப்பதுடன், மாநிலம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாலைப் பாதுகாப்புக்கான உணர்வுப்பூர்வ மனிதக் காரணிகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
ஒடிசா அமைச்சர் பிபூதி பூஷன் ஜெனாவுடன் சென்னை ஐஐடி (ETV Bharat Tamil Nadu) நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு:
இதுகுறித்து ஒடிசா மாநில எஃகு, சுரங்கம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிபூதி பூஷன் ஜெனா கூறும் போது, "ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்மை பயக்கும் பாதுகாப்பு, கண்டுபிடிப்புகளை வழங்கும் ‘விக்சித் ஒடிசா’ என்ற எங்களது இலக்கில் சென்னை ஐஐடி உடனான இந்த கூட்டாண்மை முக்கிய படியாகும்.
நிகழ்நேரத் தரவுகளையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சாலைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்குத் நீண்டகாலத் தீர்வுகளை திறம்பட உருவாக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கவனம் செலுத்தப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உயிர்களைக் காக்கும்:
இந்த ஒப்பந்தம் குறித்து ஒடிசா அரசின் போக்குவரத்துத்துறை ஆணையர் அமிதாப் தாக்கூர் கூறும்போது, "மூல காரணப் பகுப்பாய்வு அளவீடுகள் அல்லது மனிதக் காரணிகள் அடிப்படையிலான சாலைப் பாதுகாப்பு தணிக்கைகளைப் பயன்படுத்தி விபத்து, விசாரணை போன்றவற்றை அறிவியல் ரீதியாக அணுகவுள்ளதால், இத்திட்டம் சிறந்த விசாரணை, தணிக்கைகளுக்கான முறைகளை உருவாக்குவதற்கு மேம்பட்ட திறன்களுடன் அதிகாரிகள் செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.
ஒடிசா அமைச்சர் பிபூதி பூஷன் ஜெனாவுடன் சென்னை ஐஐடி (ETV Bharat Tamil Nadu) இத்தகைய கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை, சான்றுகள் அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த எங்களுக்கு உதவும். அதன் மூலம் மனித உயிர்களைக் காக்கவும், சாலைகளை ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றவும் இயலும். மேலும் சாலைப் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமல்படுத்தவும், அவ்வாறான பிரச்சாரங்கள் மூலம் பயனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உத்திகளை வகுக்க சென்னை ஐஐடி உதவிகரமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
மாஸ்டர் டிரைனர் (Master trainer) :
தகவல், கல்வி, தொடர்பு ஆகியவற்றுக்கான உத்திசார் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆர்பிஜி ஆய்வகம், ஒடிசா காவல்துறையின் விசாரணை அதிகாரிகளின் விசாரணை முறைகளில் ‘காரணிகளை வகைப்படுத்தும் முறையைப் பயன்படுத்துவதில் ஆர்பிஜி ஆய்வகம் மேம்படுத்தும் செயல்திட்டம் பயன்படுத்தப்படும். விபத்துக்கான மூல காரணங்களைக் கண்டறிவதற்கு மனிதக் காரணிகள், உணர்வுப்பூர்வமான அணுகுமுறையைப் பின்பற்ற விசாரணை அதிகாரிக்கு வடிவமைக்கப்பட்டட சிந்தனைத் திறன்களை வழங்க இந்த திட்டம் முயற்சிக்கும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலையில் 1,000 கி.மீ தொலைவுக்கு மனிதக் காரணிகள் அடிப்படையிலான சாலைப் பாதுகாப்பு குறித்து ஆர்பிஜி ஆய்வகம் தொடர்ச்சியாக தணிக்கை செய்துள்ளது.
விளையாட்டுகள், குறும்படங்கள், வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ‘மாஸ்டர் டிரைனர்’ பயிற்சிப் பட்டறைகளை நடத்தி மாநிலம் முழுவதும் உள்ள எதிர்கால சாலைப் பயனாளிகளும் மாணவர்கள், பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் செயல்பாட்டின் அடிப்படையிலான கற்றல் மூலம் பொறுப்பான ஓட்டுநர்களாக இருக்க பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற நபர்கள் அந்தந்தப் பள்ளிகளில் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க முதன்மை பயிற்சியாளர்களாக செயல்படுவார்கள்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்:
- திட்டமிட்ட இலக்கு சார்ந்த அணுகுமுறைகளை மேற்கொள்ள பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துவதற்காக, அனைத்து சாலைப் பாதுகாப்பு தொடர்புடையோரிடையே திறன் வளர்ப்புத் திட்டங்களை செயல்படுத்துதல்
- சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவமைப்பு சிந்தனை அணுகுமுறை, சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும் பல்வேறு மனிதக் காரணி சிக்கல்களைப் புரிந்துகொள்ளுதல், திட்டமிட்ட அணுகுமுறைகளைப் பின்பற்றுதல்
- அனைத்து வயதினரும் சாலைப் பாதுகாப்பு: சாலைப் பயனர்கள் குறித்து உணர்த்தும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான விரிவான தகவல், கல்வி, தொடர்புத் திட்டம்.
இதையும் படிங்க:சென்னைக்கு வருகிறது ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்.. ரூ. 3657.53 கோடியில் திட்டம்!
மேலும், இந்த ஒப்பந்தம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, "இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாலைப் பாதுகாப்பு என்பது மக்களின் நல்வாழ்வையும், நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் நேரடியாக பாதிக்கக்கூடிய அவசரமான, முக்கியமான சவாலாகும். சென்னை ஐஐடி சாலைப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாண புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை இடைவிடாமல் வழங்கி வருகிறோம்.
விபத்து ஏற்படக்கூடிய இடங்களைக் கண்டறிவது, விபத்து பற்றிய விசாரணைக்காக மேம்பட்ட கருவிகளை உருவாக்குவது முதல் அவசரகால மீட்பு அமைப்புகளை வடிவமைப்பது வரை எங்களது முயற்சிகள் தொடர்ந்து உயிர்களைக் காப்பாற்றுவதையும், காயங்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.