தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: வடசென்னை தொகுதியில் வாகை சூடப்போவது யார்? - North Chennai Election Result 2024 - NORTH CHENNAI ELECTION RESULT 2024

North Chennai Lok Sabha Election Result 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் (GFX Credit -ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:17 PM IST

வடசென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில், வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பியாக உள்ள கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கினார். அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அமுதினி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

2019 தேர்தலில் வென்றது யார்?: இத்தொகுதியில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி (திமுக) 5,90,986 வாக்குகளை அள்ளினார். அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக - அதிமுக கூட்டணி) 1,29,468 வாக்குகளும், காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) 60,515 வாக்குகளும் பெற்றனர். மௌரியா (மநீம) 1,03,167 வாக்குகளும், சந்தானகிருஷ்ணன் (அமமுக) 33,277 வாக்குகளும் விழுந்தன.

அத்தேர்தலில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,61,518 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் 67.20 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை இத்தொகுதியில் 60.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையும் படிங்க:தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024; வடசென்னை கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details