தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ்நாட்டில் யாரும் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது" -செல்வப்பெருந்தகை! - K SELVAPERUNTHAGAI

தமிழ்நாட்டில் யாரும் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாத சூழல் காலம், காலமாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 10:40 PM IST

சென்னை: சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநிலத் தலைவி புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமையில் 99 ஆவது செயற்குழு கூட்டமும், இலவச நலவாரிய பதிவு துவக்க விழாவும் நடைபெற்றது. இதனை அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறியதாவது, "முன்பு எல்லாம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 92 சதவீதம் இருந்தனர். பாஜக ஆட்சிக்கு பின் 95 சதவீதமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த தேசத்தில் உள்ளனர். தவறான பொருளாதார கொள்கை, தொழிலாளர் கொள்கைகள் பாஜக வைத்திருப்பது தான்.

செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

2006 முதல் 2011 வரை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் வாரியங்களையும் கொண்டு வந்தார். ஆனால் இப்போது 3 குறைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தங்கள் எல்லாம் அதானிக்கும், அம்பானிக்கும் ஆதரவாக உள்ளது, இதை வன்மையாக தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கம் கண்டிக்கிறது.

டிசம்பரில் இரண்டாவது வாரத்தில் சட்டப்பேரவையில் கூட வாய்ப்புள்ளது. அப்போது தொழிலாளர் பிரச்சினைகளைச் சட்டப்பேரவையில் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கம் சார்பில் பேசப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் , கட்டிட தொழிலாளர்கள் இடையே பெரிய பாகுபாடு உள்ளது. கட்டிடத் தொழிலாளர்களுக்கு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கும் போது ஒரு சதவீதம் செஸ் வழங்க வேண்டும் என்பது சட்டம்" என்றார்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி அலுவலகங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி மட்டும் இவ்வளவு கோடியா? - ஆர்டிஐ-யில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தொடர்ந்து அமைச்சர் ஐ பெரியசாமி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்று பேசியது மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசும்போது, "பொதுவுடைமை கட்சி பாலகிருஷ்ணன் சொன்னது 100 சதவீதம் உண்மைதான்.

அதில் மாற்று கருத்து இல்லை. கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது.தொகுதிகளை வெற்றி பெறலாம். ஒவ்வொரு கட்சிகளுக்கும் எங்கெங்கு பலம் இருக்கிறதோ அங்கு வெற்றி பெறுவார்கள். முழுமையாக மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விதான்.

ஆட்சியில் பங்கு காங்கிரஸ் எப்போது கேட்டதில்லை. 2006 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கூட்டணி வெற்றி பெற்றது. பெரும்பான்மை திமுகவுக்கு இல்லை. சோனியா காந்தி கருணாநிதி ஆட்சி தேவை தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுப்பார் என்று தார்மீக அடிப்படையில் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் ஆதரவு அளித்தார்.

5 ஆண்டுகள் காங்கிரஸ் பேரியக்கம் வெளியிலிருந்து ஆதரவளித்தது. கூட்டணியில் இடம் பெற வேண்டும் மந்திரி சபையில் சேர வேண்டும் என்று அன்று நிபந்தனை வைத்திருந்தால் நிச்சயம் சேர்ந்திருப்போம். அன்று காங்கிரஸ் பெருந்தன்மையோடு கருணாநிதி சேவை தேவை என்று வெளியிலிருந்து ஆதரவளித்தது. இந்த கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் இது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். எங்கள் கருத்து தமிழ்நாட்டில் யாரும் தனித்து நின்ற ஆட்சி அமைக்க முடியாத சூழல் காலம் காலமாக உள்ளது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details