தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பேரணியை ஸ்ரீதர் வேம்பு துவக்கி வைத்தார்.
சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியானது திருவேங்கடம் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், "போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என சென்னையில் பல பெற்றோர்கள் என்னிடம் புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே தகவல்கள் உள்ளது. மத்திய அரசு போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:"இந்திய மக்களின் எதிர்ப்பை மீறி மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகிறார்" - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு! -
போதை கிடங்குகள் பாகிஸ்தான், தமிழகம் மற்றும் துபாய் போன்ற பகுதிகளில் செயல்படுகிறது. மத்திய அரசு போதை தடுப்புப் பிரிவினர், பல கிலோ கிராம் கெமிக்கல் போதைப் பொருட்களைப் பிடிக்கின்றனர். ஆனால் மாநில போலீசார் ஒரு கிராம் கூட பிடித்ததாகத் தெரியவில்லை" என்றார்.