கோயம்புத்தூர்:தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அணைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிராமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நீலகிரி(தனி) நாடாளுமன்றத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட எல்.முருகன் கடந்த சில நாள்களுக்கு முன்னர் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த சில வாரங்களாக, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வருகிறார் எல்.முருகன்.
அந்த வகையில் நேற்று(திங்கள்கிழமை) அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னூர், குன்னத்தூராம்பாளையம், கஞ்சப்பள்ளி, பள்ளபாளையம், பசூர், பொங்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.