திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது (35). இவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பில் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீடு ஏர்வாடி முகைதி நகரில் உள்ள ரிஜெக்ட் தெருவில் உள்ளது.
இந்நிலையில் இன்று (பிப்.10) காலை சுமார் 5.45 மணி முதல் தேசிய புலனாய்வு முகமையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பரத் நாயக் தலைமையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினர் பக்ருதீன் அலி அகமது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.