மயிலாடுதுறை:ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், மயிலாடுதுறையில் மயிலை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 200க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
செம்மங்குளம் பகுதியில் தொடங்கிய பேரணியை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் மணவாளன் தொடக்கி வைத்து, பேரணியில் பங்கேற்றார். இப்பேரணி காந்திஜி சாலை, மணிக்கூண்டு, பட்டமங்கல தெரு, ஸ்டேட் பேங்க் சாலை, அரசு மருத்துவமனை சாலை, கச்சேரி சாலை வழியாக சென்று கேணிக்கரை பகுதியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.