தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 7:50 PM IST

ETV Bharat / state

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியீடு! - minister senji masthan

Tamil Nadu Welfare and Rehabilitation: அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் புதிய 4 அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் (credit - Etv Bharat Tamil Nadu)

சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள 4 புதிய அறிவிப்புகள்

1) மண்டபம் முகாம் வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்

மண்டபம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, முகாம் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதுடன் அவர்கள் சுயசார்புடன் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

2) இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சாலை மற்றும் கழிவுநீர்க் கால்வாய் வசதிகள் மேம்படுத்துதல்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சாலைகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் புதிதாக அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டமானது நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மேம்படுத்தப்படும்.

3) சுற்றுச்சூழல்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மரம் நடுதல் / நாற்றங்கால் அமைத்தல் / வீட்டு தோட்டங்கள் அமைக்கும் திட்டம்மரம் நடுதல் / நாற்றங்கால் அமைத்தல் / வீட்டு தோட்டங்கள் அமைக்கும் திட்டம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

4) இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மனநல சேவைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்துதல்

தமிழகமெங்கும் உள்ள 103 முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் மனநல மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, மனநல விழிப்புணர்வை மேற்கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க:"பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது" - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

ABOUT THE AUTHOR

...view details