தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்னேஷ் சிவன் இயக்கிய 'நீங்க ரோடு ராஜாவா' குறும்படம்.. போக்குவரத்து போலீசாரல் வெளியீடு! - chennai traffic police

Neenga Road Rajava: பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து குறித்தானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'நீங்க ரோடு ராஜாவா' என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய குறும்படம் ஒன்றை சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

நீங்க ரோடு ராஜாவா குறும்படம் வெளியீடு
நீங்க ரோடு ராஜாவா குறும்படம் வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 10:57 PM IST

சென்னை:கடந்த சில நாட்களாக சென்னையின் முக்கிய சாலைகளில் நடுவில் உள்ள கம்பங்களில் 'நீங்க ரோடு ராஜாவா..?' என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் ஒன்று நெடுந்தூரம் வைக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் ஏன் வைத்துள்ளனர்? எதற்காக வைத்துள்ளனர்? என்று விடை தெரியாமல் வாகன ஓட்டிகள் பலர் குழம்பிக் கொண்டு இருந்தனர்.

அதற்கான விடையை கொடுத்துள்ளனர். சென்னை போக்குவரத்து போலீசார். அதாவது, சாலை விதிகளை பின்பற்றாமல் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் தான் ரோடு ராஜாவாம். இது தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி மேடையில் விக்னேஷ் சிவன் பேசுகையில், "பொதுமக்களுக்கு சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க விழிப்புணர்வு வேண்டும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கூறினார்.

இதன் காரணமாக "நீங்க ரோடு ராஜாவா" என்ற குறும்படத்தை இயக்கி காட்சிப்படுத்தியுள்ளேன். இதன் நோக்கம் கலாச்சாரம், தொழில்நுட்பம்உள்ளிட்டவற்றில்ல முன்னேறு வரும் நம்மிடம் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனை பின்பற்றாததால் பல விளைவுகள் பயங்கரமாக உள்ளது. இந்த குறும்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு அளித்த போக்குவரத்து காவல்துறைக்கு நன்றி.

என்னை ஐ.பி.எஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய குடும்பத்தாரின் ஆசை. ஆனால், நான் திரைத்துறைக்கு வந்துவிட்டேன். திரைத்துறை மூலம் காவல்துறைக்குப் பங்களிப்பு அளித்துள்ளது பெருமையாக உள்ளது" என்றார்.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேசுகையில், "வேளச்சேரியில் கடந்த சில தினத்திற்கு முன்பு சாலையில் எதிர் திசையில் வந்த நபர்களைக் கண்டு அபராதம் விதித்தோம். அப்பொழுது, பொதுமக்கள் சிலர் மாதக் கடைசியாக இருக்கும் அதனால் தான் அபராதம் விதிக்கிறார்கள் எனத் தெரிவித்தார்கள்.

இது போன்ற கூற்றைக் கலைய வேண்டும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த குறும்படத்தை எடுத்துள்ளோம். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்திருந்தோம். இதனை அடுத்து அவரே முழு ஆர்வம் எடுத்து பல நடிகர்களை நடிக்க வைத்து பிரித்தேயேகமாக குறும்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தியாவிலேயே, தமிழ் நாட்டில் தான் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. தலைக்கவசம் அணியாத காரணத்தால் 2021ல் 279 ஆக இருந்த உயிரிழப்பு, 2023ல் 196 ஆக 38% குறைந்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய ஆணையர், இந்தாண்டு தவறான பாதை(wrong route) பயணம் செய்தது தொடர்பாக 60181 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் தான் விபத்துக்கள் குறைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்; நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details