கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர், இதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை விஜயகுமார் தனது தோட்டத்திற்குச் சென்று விட்டு மீண்டும் பிற்பகலில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.