தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது மஞ்சள் மற்றும் பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை தடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.