தூத்துக்குடி: தேசிய அளவிலான கயாக் (Kayak) மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் (Stand Up paddling) கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள், நேற்று தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட, ராஜஸ்தான் உள்ளிட்ட நாடு முழுவதிலிருந்தும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தேசிய கனாயிங் மற்றும் கயாக்கிங் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு கனாயிங் மற்றும் கயாகிங் அசோசியேஷன் சார்பாக நடைபெறும் இது 2வது முறையான தேசிய அளவிலான கடல் நீர் சாகச விளையாட்டாகும். நேற்று தொடங்கிய இந்த கடல் சாகச போட்டிகளை, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:ஓடும் ரயிலில் படுக்கை சரிந்து சிறுவன் காயமடைந்த விவகாரம்: மதுரை ரயில்வே கோட்டம் விளக்கம்!
கயாக் (துடுப்பு மூலம் கடலில் செல்வது) மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் (நின்றபடி துடுப்பைக் கொண்டு கடலில் செல்வது) என இரு பிரிவுகளில் 500 மீ முதல் 5,000 மீ தூரம் வரையில் நடைபெற்றது. மேலும், இந்தப் போட்டிகள் அனைத்தும் சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் என்ற பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவிலான கடல் சாகசப் போட்டிக்கு தகுதி பெற உள்ளனர். மேலும், வெற்றி பெறும் வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டிகள் நேற்று துவங்கிய நிலையில், மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “இந்த விளையாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராக்கனைகளுக்கு வாழ்த்துகள். முதலமைச்சர், கடல்சார் விளையாட்டிற்காக தூத்துக்குடி தொகுதிக்கு ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது. முத்துநகர் கடற்கரையில் துவங்கினால் உபயோகமாக இருக்கும்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்