தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கருணாநிதி" - பிரதமர் மோடி புகழாரம்! - Modi About Karunanidhi - MODI ABOUT KARUNANIDHI

narendra Modi: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது நீண்ட கால பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்த புகைப்படம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்த புகைப்படம் (credits - narendra modi X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 4:36 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட கால பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார்.

தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தத்தமது மாநிலங்களில் நாங்கள் இருவரும் முதல்வர்களாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடனான என்னுடைய பரிமாற்றங்களை நான் வாஞ்சையோடு நினைவுகூர்கிறேன்” என பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“24 மணி நேரம் பொறுங்கள்..” கதிர் ஆனந்த் நம்பிக்கை! - Kathir Anand

ABOUT THE AUTHOR

...view details