தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சிகரெட் இல்லாம எதுக்கு கடை நடத்துற?”.. கூல்டிரிங்ஸ் கடையில் ரகளை! - youth fight with cooldrink shop - YOUTH FIGHT WITH COOLDRINK SHOP

youth fight with cooldrink shop: மது போதையில் கூல்டிரிங்ஸ் கடையில் சிகரெட் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி இரு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth fight with cooldrink shop
youth fight with cooldrink shop (photo credits - etv bharat tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 10:48 PM IST

திருவாரூர்:மது போதையில் கூல்டிரிங்ஸ் கடையில் சிகரெட் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை நன்னிலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அச்சுதமங்களம் செட்டி தெருவைச் சேர்ந்தவர் தேவா (45). இவர் அச்சுதமங்களம் கடைத் தெருவில் 8 வருடங்களாக கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல நேற்று (புதன்கிழமை) கடையைத் திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கோபி (23) மற்றும் அஜய் (24) ஆகியோர் மது போதையில் கூல்டிரிங்ஸ் கடைக்கு வந்துள்ளனர். அங்கு வந்த அந்த இளைஞர்கள், தங்களுக்கு சிகரெட் மற்றும் போதைப்பொருள் வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கு கடை உரிமையாளர் தேவா, இந்த பொருட்கள் எல்லாம் இங்கே விற்பனை செய்வதில்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், “சிகரெட் இல்லாமல் நீ எதற்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாய்?” என தரக்குறைவாக கூல்டிரிங்ஸ் பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், கோபி என்கிற இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உதயா என்பவரை தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவர்களைத் தடுத்துள்ளனர். இதில், இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் தேவா, நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், கோபி மற்றும் அஜய் ஆகிய இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். கத்தியுடன் இளைஞர்கள் கூல்டிரிங்ஸ் கடையில் ரகளையில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:சேலம் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல்; சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடைகளுக்கு தீ வைப்பு; போலீசார் தடியடி! - Salem Festival Clash

ABOUT THE AUTHOR

...view details