தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'MISS WORLD'-க்கு தயாராகும் திருநங்கை ரஃபியா! - Transgender Rafia

Transgender Rafia: ஜெய்ப்பூரில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த திருநங்கை ரஃபியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருநங்கை ரஃபியா
திருநங்கை ரஃபியா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:51 AM IST

நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், நாகூரை அடுத்த வடக்கு பால் பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ரஃபியா. சிறு வயதிலேயே திருநங்கையாக மாறிய இவர், திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சாதிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அழகு கலையில் ஆர்வம் கொண்ட அவர், பெங்களூரில் அழகுக் கலை நிபுணர் படிப்பை எட்டு மாதங்கள் படித்து, அந்த துறையிலேயே பயணிக்க தொடங்கி உள்ளார். தொடர்ந்து, அழகு நிலையத்தில் மாத ஊதியத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்துகொண்டே பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று சாதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அதன் பலனாக, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து வந்துள்ளார். தற்போது மிஸ் இந்தியா (MISS INDIA) திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் பங்கேற்க முயற்சி செய்து வந்த அவர், 15 நாடுகள் பங்கேற்ற ஆன்லைன் வாக்குப்பதிவில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து, அதிக வாக்குகள் பெற்று வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள திருநங்கைகளுக்கான உலக அழகி (Transgender Miss World) இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஒய்யார நடை நடந்து, சிகை அலங்காரங்கள் சிறப்பாக செய்து தரமாக பயிற்சி எடுத்திருப்பதாக கூறியுள்ள திருநங்கை ரஃபியா, கண்டிப்பாக இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று உலக அளவில் அங்கீகாரத்தைப் பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து போட்டி ஒன்றில் ரஃபியா கூறியதாவது, "நான் மாடலிங் செய்து கொண்டு இருக்கிறேன். 2018ஆம் ஆண்டு 'மிஸ் பாண்டிச்சேரி' பட்டத்தை வென்று உள்ளேன். அதனைத் தொடர்ந்து, 'மிஸ் சிதம்பரம்' போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பிடித்தேன். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற 'இந்திய பிரபஞ்ச அழகி' போட்டியில் பங்கேற்று முதல் இடம் பிடித்தேன். இதே போல் பல்வேறு போட்டிகளில் நான் பங்கேற்றுள்ளேன்.

திருநங்கைகள் சாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த சமுதாயம் வளரும் போது திருநங்கைகளும் வளர வேண்டும். கடந்த 2022ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால், பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக என்னால் பங்கேற்க முடியவில்லை. என்னுடைய நீண்ட நாள் கனவு உலக அழகிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அலுவலகப் பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details