சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் கூட்டணி இன்றி 40 தொகுதிகளும் மைக் (Mike Symbol) சின்னத்தில் களம் கண்ட நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
பாஜக, அதிமுகவை முந்திய நாம் தமிழர்:புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அதேபோல், கள்ளக்குறிச்சி தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம், திருச்சி தொகுதியில் அமமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிக்கு மூன்றாவது இடம், நாகப்பட்டினம் தொகுதியில் நேரடியாக பாஜக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி 1,31,294 வாக்குகள் பெற்ற வேட்பாளர் கார்த்திகா என நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்களவைத் தொகுதிவாரியாக நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
வரிசை எண் | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | இடம் |
1 | அரக்கோணம் | ஆசிபா நஸ்ரின் | 98,944 | நான்காம் இடம் |
2 | ஆரணி | பாக்யலட்சுமி | 66,740 | நான்காம் இடம் |
3 | மத்திய சென்னை | கார்த்திகேயன் | 46,031 | நான்காம் இடம் |
4 | வட சென்னை | அமுதினி | 95,954 | நான்காம் இடம் |
5 | தென் சென்னை | தமிழ்ச்செல்வி | 83,972 | நான்காம் இடம் |
6 | சிதம்பரம் | ஜான்சிராணி | 65,589 | நான்காம் இடம் |
7 | கோயம்புத்தூர் | கலாமணி ஜெகநாதன் | 82,657 | நான்காம் இடம் |
8 | கடலூர் | மணிவாசகன் | 57,424 | நான்காம் இடம் |
9 | தருமபுரி | அபிநயா | 65,381 | நான்காம் இடம் |
10 | திண்டுக்கல் | கலைராஜன் | 97,845 | நான்காம் இடம் |
11 | ஈரோடு | விஜயகுமார் | 77,911 | நான்காம் இடம் |
12 | கள்ளக்குறிச்சி | ஜெகதீசன் | 73,652 | மூன்றாம் இடம் |
13 | காஞ்சிபுரம் | சந்தோஷ்குமார் | 1,10,272 | நான்காம் இடம் |
14 | கன்னியாகுமரி | மரியா ஜெனிபர் | 52,721 | மூன்றாம் இடம் |
15 | கரூர் | கருப்பையா | 57,203 | நான்காம் இடம் |
16 | கிருஷ்ணகிரி | வித்யா ராணி வீரப்பன் | 1,27,642 | நான்காம் இடம் |
17 | மதுரை | சத்யாதேவி | 92,879 | நான்காம் இடம் |
18 | மயிலாடுதுறை | காளியம்மாள் | 1,27,642 | நான்காம் இடம் |
19 | நாகப்பட்டினம் | கார்த்திகா | 1,31,294 | மூன்றாம் இடம் |
20 | நாமக்கல் | கனிமொழி | 95,577 | நான்காம் இடம் |
21 | நீலகிரி | ஜெயக்குமார் | 58,821 | நான்காம் இடம் |
22 | பெரம்பலூர் | தேன்மொழி | 1,13,092 | நான்காம் இடம் |
23 | பொள்ளாச்சி | சுரேஷ்குமார் | 58,196 | நான்காம் இடம் |
24 | ராமநாதபுரம் | சந்திரபிரபா ஜெயபால் | 97,672 | நான்காம் இடம் |
25 | சேலம் | மனோஜ்குமார் | 76,207 | நான்காம் இடம் |
26 | சிவகங்கை | எழிலரசி | 1,63,412 | நான்காம் இடம் |
27 | ஸ்ரீபெரும்புதூர் | ரவிச்சந்திரன் | 1,40,233 | நான்காம் இடம் |
28 | தென்காசி | மதிவாணன் | 1,30,335 | நான்காம் இடம் |
29 | தஞ்சாவூர் | ஹூமாயூர் கபீர் | 1,20,293 | நான்காம் இடம் |
30 | தேனி | மதன் | 76,834 | நான்காம் இடம் |
31 | தூத்துக்குடி | ரொவினா ரூத் ஜேன் | 1,20,300 | நான்காம் இடம் |
32 | திருச்சி | ஜல்லிக்கட்டு ராஜேஷ் | 1,07,458 | மூன்றாம் இடம் |
33 | திருநெல்வேலி | சத்யா | 87,688 | நான்காம் இடம் |
34 | திருப்பூர் | சீதாலட்சுமி | 95,726 | நான்காம் இடம் |
35 | திருவள்ளூர் | ஜெகதீஷ் சந்தர் | 1,20,838 | நான்காம் இடம் |
36 | திருவண்ணாமலை | ரமேஷ்பாபு | 83,869 | நான்காம் இடம் |
37 | வேலூர் | மாதேஷ் ஆனந்த் | 53,284 | நான்காம் இடம் |
38 | விழுப்புரம் | களஞ்சியம் | 57,242 | நான்காம் இடம் |
39 | விருதுநகர் | கெளசிக் | 77,031 | நான்காம் இடம் |
40 | புதுச்சேரி | மேனகா | 39,603 | மூன்றாம் இடம் |
நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகள்: 40 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 36 லட்சத்து 88 ஆயிரத்து 799 வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் எழிலரசி 1,63,412 வாக்குகளும் குறைந்தபட்சமாக புதுச்சேரியில் மேனாகா 39,603 வாக்குகளும் பெற்றுள்ளனர்.